போடுறா தம்பி பிரேக்க.. அரசு பேருந்துக்குள் தூக்கி வீசப்பட்ட பெண்..! இருக்கையும் சாய்ந்தது..!

0 2382

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்ற ஓட்டுனர் திடீர் பிரேக் போட்டதால் பெண்பயணி ஒருவர் இருக்கையுடன் தூக்கிவீசப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது....

போட்ரா தம்பி பிரேக்க... என்று வடிவேலு பாணியில் பிரேக்க போட்டதால் அரசு பேருந்தின் இருக்கை பெயர்ந்து பயணி தூக்கி வீசப்பட்ட சம்பவம் செங்கல் பட்டு அருகே அரங்கேறி உள்ளது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் அடுத்த சோகன்டி என்ற கிராமத்திற்கு தடம் எண் 27 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று எப்போதும் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சோகன்டி புறப்பட்டு சென்ற இந்த பேருந்தை ஓட்டுனர் சந்திரசேகர் என்பவர் ஓட்டிச்சென்றார்.

பேருந்தில் 25 பயணிகள் இருந்த நிலையில் வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு பெண் பயணி ஒருவர் முன் கூட்டியே ஓட்டுனரிடம் கூறினார்.

நிறுத்துவதாக கூறிய சந்திரசேகர் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் அதி வேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.

அந்த பெண் பயணி மீண்டும் பேருந்தை நிறுத்தச்சொல்லி உரக்க கத்தியதால், நடத்துனர் மணிமாறன் விசிலடித்தார்.

அப்படி இருந்தும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனர் சந்திரசேகர் சில கிலோ மீட்டர் கடந்ததும் கண்மூடித்தனமாக திடீரென்று பிரேக் போட்டதால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்பயணி ஒருவர் இருக்கையோடு சேர்ந்து பேருந்துக்குள் தூக்கி வீசப்பட்டார்.

அந்தப்பெண் கால் முட்டியில் காயம் அடைந்து வலியால் துடிப்பதை கண்டதும் சக பயணிகள் ஓட்டுனரை சத்தம் போட்டனர்.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத ஓட்டுனர் சந்திரசேகர் பதிலுக்கு பயணிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

சாய்ந்த இருக்கையை நடத்துனர் நிமிர்த்திவைக்க பேருந்துக்குள் ஏறிய பெண் ஒருவர் அந்த உடைந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.

கீழே விழுந்த பெண்ணை தூக்கிவிட கூட ஒருவரும் முயற்சிக்காமல் வாக்கு வாதம் செய்த நிலையில் ஒட்டுனர் நடத்துனர் ஆகியோர் பயணிகளை மிரட்டும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகுந்த அறிவுரைகளை வழங்குவதோடு, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments